.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, November 10, 2008

போதைக்காக பாம்புக்கடி: விபரீத மரணங்களுக்கு முன் தடுத்துநிறுத்துமா தமிழகஅரசு?

போதைக்காக உயிரை பணயம் வைக்கும் பாம்புக்கடி பயங்கரம்!

விபரீத மரணங்களுக்கு முன் தடுத்துநிறுத்துமா தமிழகஅரசு?

`ஸ்..ஸ்... ஸ்...' சீற்றத்துடன் அந்தக் குட்டிப் பாம்பு நாக்கை நீட்டி உதட்டை முத்தமிடத் துடிக்கிறது... ஒவ்வொரு முறை சீறும் பொழுதும் விஷம் துளித் துளியாய், அரிசி போன்ற அதன் பற்களில் நுனியில் தேங்குகிறது.
நன்றி: குமுதம் 12/11/2008


பாம்பைக் கையில் பிடித்திருப்பவர் கொஞ்ச நேரம் அதன் போக்கில் வளைய, நெளிய விட்டுவிட்டு, சட்டென தன் இருவிரல்களுக்கிடையில் அதன் தலையை கிடுக்கிப்போல் இறுக்கிப் பிடிக்கிறார். பாம்பின் உடம்பும் வாலும் கைகளில் பின்னிப் பிணைய, கருநிற நாக்கு எதிரில் இருப்பவரின் உதட்டை மோப்பம் பிடிக்கிறது.


பாம்பைக் கையில் பிடித்திருப்பவர், ``பார்ட்டி... பைட்டுக்கு ரெடியா?'' என்று கேட்க, எதிரில் இருப்பவர் சில வினாடிகள் இமைக்காமல் அந்தப் பாம்பையே வெறிக்கப் பார்க்கிறார். பின் மெல்ல தன் கீழ் உதட்டை இடதுகையால் கீழ் நோக்கி இழுக்க, உட்புற உதட்டின் மென்மையான பகுதியில் சடக்கென ஒரு கடி. குட்டிப்பாம்பு குறி வைத்து அந்த இடத்தில் தன் பற்களை பதிய வைத்ததும் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு குப்பென வியர்த்தது.


கடிபட்டவர் கண்களை மூடி, சுவரோரம் கால்களை நீட்டி சாய்கிறார். முத்து முத்தாய் முகத்தில் வியர்வைத் துளிர்க்க, கைகளும் கால்களும் தளர்ந்து போகிறது. தலைக்கேறிய விஷம் மூளை நரம்புகளின் முடிச்சுகளை அறுத்தெறிய மரணத்திற்கு மிக நெருக்கத்தில் சென்ற இதயம், சில வினாடி நின்று பின் சீராகத் துடிக்கிறது... துவண்டு விழுந்த தலை கொஞ்சம் நிமிர்கிறது. நமக்குப் போன உயிர் திரும்பி வந்தது.


``எல்லாம் ரெண்டு நிமிஷத்துல சரியாகிடும்'' என்று பதட்டமில்லாமல் சொல்லிய பாம்புக்காரர், பக்கவாட்டில் துளைகள் போடப்பட்ட ஒரு டிஃபன் கேரியரில் அந்தப் பாம்பை விட்டார். ஒன்றரையடி நீளமே இருந்த அந்த விஷப்பாம்பு அதில் சுருண்டுப் படுத்துக்கொண்டது.அவர் சொன்னது மாதிரியே கடிபட்டவர் ஐந்து நிமிடங்களில் ஒரு பரவசமானப் புன்னகையுடன் நம்மை நிமிர்ந்து பார்த்தார். தள்ளாட்டமின்றி எழுந்து நின்றவர் பர்ஸில் இருந்து 2500 ரூபாயை எடுத்து பாம்புக்காரரிடம் கொடுக்க, பாம்பைக் கொண்டு வந்தவர் பணத்துடன் புறப்படத் தயாரானார். அதற்குள் வெளியில் மழை பிடிக்க, தயங்கி நின்ற அவரிடம் அப்பாவியாய் பேச்சைக் கொடுக்க, அவரும் சில தகவல்களைக் கக்கினார்.


``ச்சும்மா ஊசி குத்தினா மாதிரி இருக்கும். அப்புறம் தேள் கொட்டிய விறுவிறுப்பு ரெண்டு நிமிஷம் இருக்கும். உடம்பெல்லாம் கொஞ்ச நேரம் அனல் பறக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐஸ் கட்டி மாதிரி ஒரு குளுமை தெரியும்... அப்புறம் குஷிதான். ரெண்டு நாளைக்கு இந்தப் போதை தலைக்கேறி நிற்கும். ளி.ஞி (ஓவர்டோஸ்) ஆயிடுச்சின்னா மட்டும் உசிர் போயிடும்! பிரவுன் சுகர், ஹெராயின் இப்படி எந்த போதையும் ஏறாதவர்கள்தான் இந்த பைட்டுக்கு வருவாங்க.


நானும் போதைக்கு அடிமையாகி பைட் போட்டுக்க வந்தவன்தான். அப்புறம் இந்தப் பாம்புகளுக்குச் சொந்தக்காரர் ஆண்ட்ரூஸ்கிட்ட வேலைக்குச் சேர்ந்துட்டேன். அவர் வெளிநாட்டுக்காரர். அஞ்சாறு பாம்பு வச்சிருக்கிறார். ஒரு பாம்போட விலை 25000 ரூபாய்க்கு மேல... `பிளாக் மாம்பா'ன்னு இந்தப் பாம்பைச் சொல்வாரு. ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு கண்ணாடித் தொட்டி வச்சு வளர்க்கிறார். கறையான், பூரான், புழு, பூச்சி இதான் சாப்பாடு.


முதல்ல இந்தப் பாம்பை வெளிநாட்டுல இருந்துதான் கொண்டு வந்தாங்க. ஆனா இப்போ இங்குள்ள காட்டுல பிடிக்கறதா சொல்றாங்க. ஒரு பாம்பை வச்சு ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பைட் போடலாம். அவ்வளவுதான். ஒரு பாம்பு சாதாரணமா எட்டு வருஷம் இருக்கும். பைட் போட்டா ஒன்றரை வருஷத்துல செத்துரும். இது குட்டிப் பாம்பு, பெரிய பாம்பு எட்டடி இருக்கும். குட்டிப் பாம்பு விஷம்தான் ராஜபோதை. பெரிசு கடிச்சா மேல போயிட வேண்டியதுதான்'' என்று முட்டி வலிக்கு தைலம் விற்பவர் மாதிரி சரளமாகச் சொல்லிவிட்டு பைக்கில் பறந்துவிட்டார்.


சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடுகளை வாடகை எடுத்து கஸ்டமர்களை அங்கு வரச்சொல்லி இந்த ஸ்நேக் பைட் பரவலாக நடக்கிறதாம்.


நாம் பார்த்தபோது பைட் போட்ட விக்கி, இரண்டு வருஷமாக இதைச் செய்து வருகிறாராம். அவரைப் போல் இந்தப் பழக்கத்திற்கு அடிமையான அவரது நண்பர்கள் பதினான்கு பேர் இதனாலேயே இறந்தும்விட்டார்களாம். ``ஆனாலும் என்னால் விடமுடியவில்லை!'' என்று அப்பாவியாகச் சொல்லும் விக்கி பார்ப்பது டிரைவர் வேலைதானாம்.


``போதை வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இப்படி பாம்பின் விஷத்தோடு விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது. செய்யவே கூடாது! சிறிது விஷம்கூட சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும் ஆபத்து உண்டு'' என்கிறார் பொது மருத்துவர் விஜயலட்சுமி.


சின்னதா சிகரெட்டில் ஆரம்பிக்கும் போதை கடைசியாக விஷத்தில் போய் நிற்கும் இந்த விபரீதத்தை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த மரணக் கடிக்காக பணக்கார வீட்டுப் பிள்ளைகள் முதல் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் வரை இளைஞர்கள் பலியாகிறார்கள் என்றதும் உறைந்த ரத்தம் ஓடவே இல்லை! .


இந்த பாம்புக்கடி போதையை உரிய முறையில் தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் விஷச்சாராய மரணத்திற்கு அடுத்து விஷகடி மரணங்கள் அதிகரிக்கும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.



பாம்புச்சரக்கு!


இது ஒருபுறமிருக்க மேலைநாடுகளில் ``பாம்பு மது'' என்ற புதிய சமாசாரம் பரவி வருகிறது. அதாவது ஒரு பாட்டிலில் ஒரு விஷப்பாம்பை உள்ளே போட்டுவிடுவார்கள். அந்த பாட்டிலில் விஸ்கி அல்லது பிராந்தி போன்ற மதுவை நிரப்பி அப்படியே மூடி வைத்துவிடுவார்கள். அந்தப் பாம்பு இறந்து அது மதுவில் ஊற அந்தப் பாம்பின் விஷமும் மதுவில் ஊறிவிடும். இப்படி பல மாதங்கள் ஊற வைப்பார்கள். இப்படி பாம்பில் ஊற வைக்கப்பட்ட மதுவின் விலை ஒரு லிட்டருக்கு நமது இந்திய மதிப்பின்படி ஐம்பதாயிரம் ரூபாய்!

Friday, November 7, 2008

மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்கள்.

இந்திய மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்கள்.

100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. திரு. பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.


அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.


* Visual Studio 2005/2008 Professional Edition


* Expression Studio, includingo Expression Webo Expression Blendo Expression Designo Expression Media


* SQL Server 2005 Express* SQL Server 2005 Developer Edition


* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)


மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்




தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.


2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.


இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.



மாலேகான் குண்டுவெடிப்பு: லெப்டினென்ட் கர்னல் கைது!

நாட்டின் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் துணையோடு நாட்டை துண்டாடும் சதியில் இந்துத்துவா கும்பல்!
நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் இந்து தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது எப்போது?
ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்:6 மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முதலில் தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார். அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.இந்த நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரியிருந்தனர். இதையடுத்து ராணுவம், புரோஹித்தை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புரோஹித் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
புரோஹித் அபினவ் பாரத் என்ற அமைப்பை நிறுவியர் என்று கூறப்படுகிறது. இது ஒரு இந்து தீவிரவாத அமைப்பாகும்.
புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ரமேஷுக்கு, 5 எஸ்.எம்.எஸ்.களை புரோஹித் அனுப்பியுள்ளார். மேலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும்படியும் அவர் ரமேஷை அறிவுறுத்தியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் பிடிபட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Wednesday, November 5, 2008

கலைஞர் அவர்களுக்கு! ஈழ மக்களுக்கு உதவி அவர்களை சென்றடையுமா?

மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு!
ஈழ மக்களுக்கு நீங்கள் திரட்டும் உதவி அவர்களை சென்றடையுமா?

நன்றி: குமுதம்ரிப்போர்ட்டர்.


அன்புமிக்க கலைஞர் அவர்களுக்கு!

ஒரு கழுகின் கோரக்கால்களில் சிக்கியது போல் இன்றைக்கு ஈழமக்கள் சிங்கள ராணுவத்தின் நெருக்குதலில் சிக்கித் தவிக்கிறார்கள். `போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்' என்று அந்த ராணுவம் அழைக்கின்றது. அந்த அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

ஏனெனில், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் எந்த தமிழ் சகோதரியின் மானத்திற்கும் பாதுகாப்பில்லை. அங்கே செல்கின்ற இளம் சிறுவர்களை கருங்காலி கருணா கும்பல் கடத்திச் செல்கிறது. எனவே, போராளிகளைப் பின் தொடர்ந்தால் மரணம் உறுதி என்று தெரிந்தும் அவர்களையே அவர்கள் பின் தொடருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் அவர்களுக்கு பழங்கஞ்சியைக் கொடுத்தாலும் பஞ்சாமிர்தமாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே, அந்த மக்களுக்காக தாங்கள் நிதி திரட்டுவதை இதயம் படைத்த அனைவருமே வரவேற்கிறார்கள். தாய் வீட்டுச் சீதனம் வரப்போகிறது என்று ஈழமக்களும் பெருமை கொள்கிறார்கள்.

ஆனால், நாம் தரும் உதவி நேரடியாக அவர்களுடைய கரங்களை எட்டுமா? அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஏனெனில், நடைமுறை அனுபவங்கள் கசப்பானவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இலங்கையில் ஈழப் பிரதேசத்தைத்தான் கொடுமையாகத் தாக்கியது. எல்லாம் இழந்து விட்ட ஈழமக்களுக்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு இன்ன பிற நாடுகள் கப்பல் கப்பல்களாக நிவாரண உதவிகளை அனுப்பின. அந்த நாடுகளின் தன்னார்வ நிறுவனங்கள் நேரடியாக உதவிகளை வழங்க ஆசைப்பட்டன.

ஆனால், அதற்கு சிங்கள அரசு மறுத்து விட்டது. `அனுப்புங்கள். நாங்களே அவர்களுக்கு அனுப்பி வைப்போம்' என்றார் சிங்கள அதிபர் ராஜபட்சே. உலகம் நம்பியது. ஆனால் ஒரே ஒரு பொட்டலம் கூட ஈழ மக்களுக்குக் கிடைக்கவில்லை. கொழும்பு - யாழ்ப்பாணச் சாலையையும் அடைத்து விட்டார்கள். காரணம், யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட்டே பணிய வைப்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.`எங்கள் உணவுப் பொருள் உதவிகள் என்ன ஆயிற்று?' என்று உலக நாடுகள் உலுக்கின. அவற்றை ஈழத்திற்கு அனுப்பக் கூடாது என்று சிங்கள இனவாதக் கட்சிகள் சீற்றம் கொண்டன. `அவர்களுடைய தயவில் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற என்னால் எதுவும் செய்ய முடியவில்லை' என்று ராஜபட்சே பகிரங்கமாகச் சொன்னார்.

கலைஞருக்கு ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகிறோம். ஈழமக்கள் படும் துயரத்தை அறிந்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றீர்கள்.

அதனைத் தொடர்ந்து நமது பிரதமர் தங்களுக்குக் கடிதம் எழுதினார். இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, 5,200 மெட்ரிக் டன் அரிசியும் 1500 மெட்ரிக் டன் சர்க்கரையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். நெஞ்சம் பூரித்துப் போனோம்.

இந்தியா அனுப்பிய இந்த மாபெரும் உதவி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இறக்கப்பட்டது. இந்தியா அனுப்பிய உணவு வந்து சேர்ந்து விட்டது என்று யாழ் மக்கள் அடுப்பு மூட்டத் தயாரானார்கள். இறக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அவர்களுடைய நகரங்கள் வழியாக, அவர்களுடைய வீதிகள் வழியாக, அவர்கள் வீடுகள் வழியாகத்தான் ராணுவ வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அவர்களுடைய எல்லை கடந்து சிங்கள ராணுவ முகாம்களுக்குச் சென்று சேர்ந்தன.

யாழில் ஈழப் போராளிகளின் முற்றுகையில் ஒரு லட்சம் சிங்களத் துருப்புக்கள் சிக்கிக் கொண்டன. பசி, பட்டினி என்ற நிலைதான். அவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க இந்தியா அனுப்பிய உணவுப் பொருள்கள் உதவின. இந்தியா அனுப்பிய உதவியில் 80 சதவிகிதம் ராணுவத்திற்கும் 20 சதவிகிதம் யாழ் மக்களுக்கும் பயன்பட்டதாக சிங்கள அரசே தெரிவித்தது. அந்த இருபது சதவிகிதமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்னிப் பரப்பில் போர் உக்கிரம் பெற்றிருக்கிறது. சிறகுகளை இழந்த பறவைகளைப் போல் தவிக்கும் ஈழமக்களுக்கு உதவ உலகத் தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அங்கேயும் நெடுஞ்சாலை அடைக்கப்பட்டு விட்டதால் அவர்களால் செல்ல முடியவில்லை. செல்ல முடிந்தாலும், அவர்களை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இருந்தவர்களையும் வெளியேற்றி விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் உதவிகள் கிளிநொச்சியைக் கூட எட்டிப் பார்த்ததில்லை. உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி ஈழமக்களை ராஜபட்சே அரசு பணிய வைக்க முயற்சிக்கிறது. தோற்றுப் போகிறார்கள்.

கலைஞர் அவர்களே, இப்போது நாம் சொல்லும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று சிதம்பரங்கள் வரும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஆண்டிற்கு ஒரு முறை கொழும்பு செல்வார். அதிகார பீடத்தோடு அளவளாவுவார். அப்படித்தான் சென்ற ஆண்டும் சென்றார்.

அப்போது பருப்பு ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது. அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று ராஜபட்சே அரசு கேட்டுக் கொண்டது.

அடப்பாவிகளா! எங்கள் ரத்த உறவுகளை இங்கே பட்டினி போட்டு விட்டு பாயாசம் சாப்பிட பருப்பா கேட்கிறீர்கள்? என்று சிதம்பரம் கேட்டிருப்பார் என்று நாம் எண்ணினால், வரலாற்றுப் பிழை செய்தவர்களாகி விடுவோம்.

சிதம்பரம் டெல்லி சென்றார். மத்திய அமைச்சரவை கூடியது. பருப்பு ஏற்றுமதிக்கு இருந்த தடை நீங்கியது.

கலைஞர் அவர்களே! உடனடியாகப் போர் நிறுத்தம் என்று அனைத்துக் கட்சிக் கூட்ட கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று டெல்லித் தலைமையிடம் வலிமையாக வாதாடியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தாலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முழக்கங்கள்தான். ஆகவே இனி தி.மு.க. உறவு வேண்டாம் என்றும் வாதிட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் கண்டிப்பாகத் தங்களை எட்டியிருக்கும். அவர்களை சிங்கள அரசு விரைவில் கொழும்பிற்கு அழைத்து சிறப்புச் செய்யப்போகிறது.

இப்போதும் இலங்கைக்கு 800 டன் உணவும் மருந்தும் அனுப்பப் போவதாக பிரணாப் முகர்ஜி தங்களிடம் தெரிவித்தார். அந்த உதவியை யாருக்காக யார் மூலம் விநியோகிக்கப் போகிறார்கள்? இன்னல்படும் ஈழமக்களுக்கு நாமே நேரடியாக உதவி செய்வதை சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளுமா?

சிங்கள அதிபரே விநியோகத்திற்கு ஏற்பாடு செய்வார் என்று டெல்லிச் செய்தி கூறுகிறது. அதனைவிட வங்கக் கடலுக்கு நாமே வாரிக் கொடுத்து விடலாம்.

இல்லை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் விநியோகிக்கும் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. தாங்கள் கொடுத்த எந்த உதவியும் ஈழ மக்களை எட்டவில்லை என்று அந்த அமைப்பு திரும்பத் திரும்பக் கூறுகிறது. நேசிக்கத் தெரிந்த அவர்களுக்கு ஈழமக்களின் நெஞ்சம் புரிகிறது.

இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பில் ஈழ மக்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு இல்லாது அனுப்பப்படும் எந்த உதவியும் சிங்கள ராணுவ முகாம்களுக்கே சென்று சேரும். இதுதான் இதுவரையுள்ள அனுபவம்.

குண்டுவெடிப்பில் ''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!

''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!
நாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்:
சாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்
ராம்நாராயணன்: ஏன்?
சாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
ராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)
சாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?
ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.
சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?
ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.
சாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?
ராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...
இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர். இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.
சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.

Monday, November 3, 2008

பயங்கரவாதத்தின் நிறம் காவி!

நன்றி: குமுதம் 5/11/2008

ந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.

ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை. காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.

இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.

காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'! சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர். மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.

மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.

விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.

ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன. 2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.

ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள். சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.

தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான். தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.

மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.

இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.

ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.

இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு. எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள்.

பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை.

இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..
நன்றி:குமுதம்

பயங்கரவாதத்தை தூண்டும் பால்தாக்கரேவை கைது செய்! தமுமுக கோரிக்கை!!

பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால்தாக்கரேவை கைது செய்க!
தமுமுக கோரிக்கை!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தின் ஊது குழலாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கமாக தீட்டியுள்ள கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாலேகானில் அப்பாவி மக்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தற்போது தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகள் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ரமேஷ் உபாத்யாய், சரத், குல்கர்னி மற்றும் தற்போது ராணுவத்தில் பணியிலிருக்கும் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் குற்ற செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தட்டிக் கொடுக்கும் விதமாக பால்தாக்கரே தனது விஷமக் கருத்தை விதைத்திருக்கிறார்.

பெண் சாமியார் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹிந்து இயக்கங்கள் பெண்சாமியார் பிரக்யாசிங்கை கைவிட்டு விட்டன என்று எழுதியதோடு கூறுவதோடு அந்த பயங்கரவாதிகள் செய்யும் செயலை நினைத்து பெருமைப்படுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். அப்பாவிகள் கொலை செய்யப்படுவதும், வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி அளிப்பதற்கு பெருமைப் படுவதோடு அதை பகிரங்கமாக அறிவித்து இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதும் அமைதி விரும்பும் அனைத்து இந்திய மக்களின் மீதும் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார் பால்தாக்கரே.

தீவிரவாதத் தடுப்புப் படை மற்றும் மகாராஷ்ட்ர மாநில அரசுடன் மட்டுமல்ல மத்திய அரசும் தலையிட்டு இவ்விஷயத்தில் தேசத்திற்கு விரோதமாக, பிரச்சாரம் செய்யும் பால்தாக்கரேயை, பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால் தாக்கரேயை உடனடியாகக் கைது செய்து பயங்கரவாதத்திற்கு உடந்தையான சக்திகளை ஒடுக்க வேண்டும்.

Sunday, November 2, 2008

64 லட்சம் கோடி அரசியல் தலைவர்களின் கருப்புப்பணம்! மீட்டெடுக்க நடுவன்அரசு தயங்குவது ஏன்?

அரசியல் தலைவர்களின் கருப்புப்பணம் கொட்டிக்கிடக்குது சுவிஸ்பேங்கில்!
மீட்டெடுக்க நடுவன் அரசு தயங்குவது ஏன்?

ந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.


உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.


மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.


இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.


``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.


இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.


இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.


உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.


எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.
இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.


அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.


இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.


இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். ``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..



சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?


சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.


இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?


சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.


அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

பதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்!

பதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
டேட்டியோ!'. ஐ.டி. வட்டாரங்களில் அஜால்குஜாலாக ஒலிக்கும் லேட்டஸ்ட் `மந்திரச் சொல்' இதுதான். இந்த வார்த்தையைக் கேட்டாலே மகுடி கேட்ட நாகம் போல மயங்கிப்போய் விடுகிறார்கள் ஐ.டி. கம்பெனி இளசுகள்.

அது என்ன டேட்டியோ? `டேட்டிங் வீடியோ' என்பதன் சுருக்கம்தான் இந்த டேட்டியோ. பெங்களூருவில் சக்கைப் போடு போட்டுவந்த இந்த டேட்டியோ, இப்போது கேட்டோ, கேட்காமலோ சென்னையிலும் காலூன்றத் தொடங்கி விட்டது.

மூன்று வாரங்களுக்கு முன் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற இளைஞர் `டேட்டிங்' மோசடியில் முப்பத்தைந்தாயிரம் ரூபாயை இழந்து ஏமாந்து விட்டதாகக் கூறி கமிஷனர் சேகரிடம் புகார் கொடுத்திருந்தார். எஸ்.எம்.எஸ். மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து `டேட்டிங் கிளப்'பில் அவர்களை உறுப்பினராக இணையக் கோரி, இளம்பெண்களின் ஆபாச ஆல்பத்தைக் காட்டி ஆயிரக்கணக்கில் பணம் கறப்பதுதான் டேட்டிங் மோசடி.
இந்த ரக மோசடி குறித்து ஏற்கெனவே நாம் `குமுதம் ரிப்போர்ட்டரில்' செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த டேட்டிங் மோசடி எல்லாம் சும்மா பிஸாத்து என்பதுபோல அதைவிட பரபரப்பாக அவதாரம் எடுத்திருக்கிறது டேட்டியோ அல்லது டேட்டிங் வீடியோ! இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் இறக்குமதி செய்யப்பட்டு விபரீதத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது இது.

``கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்'' என்று நமக்குத் தெரிந்த ஐ.டி. நண்பர்களின் வாயைக் கிளறினோம்.

நீண்ட யோசனை மற்றும் தயக்கத்துக்குப் பின் ஒருவழியாக அவர்கள், டேட்டிங் வீடியோ பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவிழ்த்துக் கொட்டினார்கள்.``டேட்டிங் வீடியோவின் சங்கேதப் பெயர்தான் `டேட்டியோ'. புதிதாகக் கேட்பவர்கள் இதை ஏதோ ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு டெக்னிக்கல் வார்த்தை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் டேட்டிங் என்ற வார்த்தையின் முதல் பாகத்தையும் வீடியோவின் பின்பாதியையும் சேர்த்து உருவாக்கப்பட்ட கூட்டுக்கலவை வார்த்தை இது. இந்த ரகசியம் ஐ.டி. துறையிலுள்ள எங்களைப் போன்ற ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

இந்தியாவில் டேட்டியோ ஆரம்பமான இடம் பெங்களூரு. யார் யாரோ நடித்த போர்னோகிராபி படங்களை எத்தனை நாட்களுக்குத்தான் நாம் பார்ப்பது? என்ற சலிப்பில் உருவானதுதான் இந்த டேட்டியோ முறை. வேறு ஒன்றுமில்லை. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் அழகிய இளம் பெண்களும், இளைஞர்களும் வாரஇறுதியில் ஓர் ஆடம்பரமான இருப்பிடத்தில் ஒன்று கூடுவார்கள். உற்சாக பானத்தை உள்ளே இறக்கிக் கொள்வார்கள். அதன்பின் ஆடைகளையும் லீலைகள் தொடங்கும். அதன்பிறகு யார் யாருடன் என்ற வரைமுறை எதுவும் இல்லாமல் `உறவுகள்' உற்சாகமாக அரங்கேறும். உச்சகட்ட போதையில் ஐ.டி. இளசுகள் அடிக்கும் அந்த நிர்வாண லூட்டிகள் ஒருபுறம் வீடியோவில் படமாகும். அதன் பெயர்தான் டேட்டியோ. சுமார் ஒருமணிநேரம் ஓடும் வண்ணம் டேட்டியோவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சிகளைப் பார்த்தால் நீங்கள் மிரண்டு போய்விடுவீர்கள்.

மிதமிஞ்சிய பணவசதியுடன் இருக்கும் இளம் பெண்களும், இளைஞர்களும் த்ரில்லுக்காகவும், சுகத்துக்காகவும், ரிலாக்ஸுக்காகவும் தங்களுக்கு மிக நெருக்கமான, தங்களது ஐ.டி. துறையைச் சேர்ந்த பாய்ஃபிரெண்டுகளுடன் இப்படி டேட்டியோவில் இடம் பெறச் சம்மதிக்கின்றனர்.இந்த டேட்டியோ சி.டி.யை கனவில்கூட வெளியாட்கள் யாரும் பார்த்துவிட முடியாது. மிகமிக நம்பிக்கையான, இதை வெளியில் சொல்லாத, இதை வைத்து பிளாக்மெயில், சீட்டிங் செய்யாத நண்பர்கள் வட்டாரத்துக்குள் மட்டும்தான் இந்த டேட்டியோ சி.டி. சுற்றிச்சுழலும். தனிச்சுற்றுக்கு மட்டுமே விடப்படும் இந்த டேட்டியோவின் சிறு கிளிப்பிங்ஸ் கூட வெளியே வராது. காரணம் அதிலுள்ள ரிஸ்க்தான்.

`இந்த சி.டி.யைக் காரணமாக வைத்து அந்த டேட்டியோவில் இடம்பெற்றுள்ள இளைஞர்களிடம் சிலர் மிரட்டி பணம் கறக்கலாம். அல்லது அதில் இடம்பெற்ற இளம்பெண்களை மிரட்டி தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தலாம்' என்பதால்தான் இப்படியொரு கட்டுப்பாடு. எனவே, டேட்டியோ சி.டி., ஐ.டி. துறையிலுள்ள குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வெளியே வராது. நாங்களே ஒரே ஒருமுறைதான் அந்த டேட்டியோ சி.டி.யை எங்கள் நண்பர் ஒருவர் மூலம் வேறொரு இடத்தில் பார்த்தோம். நாங்கள் பணம் தருவதாகக் கூறியும் அதன் காப்பியை எங்களுக்கு அவர் தர மறுத்து விட்டார்'' என்றவர்கள், சென்னையில் அந்த டேட்டியோ எப்படியெல்லாம் வலம் வருகிறது என்ற தகவலையும் கூறினார்கள்.

``சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் எங்கெல்லாம் ஒன்றாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் நிச்சயமாக இந்த டேட்டியோ சி.டி. இருக்கும். வார விடுமுறை நாட்களில் இவர்கள் ஹாயாக இதைப் போட்டுப் பார்த்து, ரசித்து கமெண்ட் அடிப்பார்கள். சென்னை ஐ.டி. துறையினர் இடையே ஏற்கெனவே போதை, செக்ஸ் உறவு போன்றவை ரொம்பவும் இயல்பான ஒன்றாக மாறி விட்டன. ஆனால் நல்லகாலம், சென்னையில் இன்னும் டேட்டியோ கலாசாரம் அதிகளவில் பரவவில்லை.

தற்போது பெங்களூருவில் இருந்து இறக்குமதியாகும் டேட்டியோவை ஆர்வமாகப் பார்க்கும் சென்னை ஐ.டி. இளைஞர்களும், இளைஞிகளும், அதிலுள்ள த்ரில்லுக்காகவும், சவாலுக்காகவும் நாமும் இதை ட்ரை பண்ணிப் பார்த்தால் என்ன என்ற மனநிலைக்கு வந்துவிட வாய்ப்புள்ளது. டேட்டிங் சென்று உச்சகட்ட உற்சாகக் காட்சிகளை அவர்களும் வீடியோ படமெடுக்க வாய்ப்புள்ளது'' என்ற அந்த இளைஞர்கள், கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார்கள்.

``நாங்கள், அதாவது ஐ.டி. துறையினர் மட்டுமே தெரிந்து வைத்திருந்த இந்த டேட்டியோ கலாசாரம் இப்போது வெளியாட்களுக்கும் தெரிந்து, அவர்களும் இதுபோன்ற சி.டி.க்களை மோப்பம் பிடித்துத் தேட ஆரம்பித்து விட்டார்கள். இதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த `சக்கரக்கட்டி' திரைப்படம்.

அதில், பிளேபாய் கேரக்டரில் வரும் சாந்தனுவும், அவரது நண்பர்களும் வீடியோ கேமராக்களை ரகசியமாகப் பொருத்தி, எதிர்வீட்டு இளம்பெண்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்து `லைவ்' ஆக அதை டி.வி.யில் ரசிப்பார்கள். ஐ.டி.துறையில் வேலை பார்க்கும் நவீன இைளஞர்கள் இதைப்போல சி.டி. பதிவுகளைக் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் வெளியாட்கள் இப்போது இதற்கான வேட்டைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

`சக்கரக்கட்டி' படத்தில் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படமெடுப்பார்கள். டேட்டியோவில் அப்படியெல்லாம் கிடையாது. டேட்டிங் செல்லப் போகும் பெண்களுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களின் முழுசம்மதத்தோடுதான் டேட்டியோ எடுக்கப்படும். தவிர, அந்த ஆபாசப் படங்கள் நண்பர்கள் வட்டாரத்தைத் தாண்டி எந்தக் காரணம் கொண்டும் வெளியே வராது என்ற உத்தரவாதத்தால்தான் பெண்கள் அதில் பங்கேற்கச் சம்மதிக்கிறார்கள். இதற்காக ஒரு குழுவாக `சகல' ஏற்பாடுகளுடன் இவர்கள் புறப்பட்டுப் போகிறார்கள். பெங்களூருவில் மலிந்து போய்விட்ட இந்தக் கலாசாரம், தற்போது சென்னையிலும் பரவி வருகிறது.

ஐ.டி.காரர்கள் பலர் சிறையில் அடைபட்ட உணர்வுடன் ஏகப்பட்ட மனப்புழுக்கத்துடன் தவிக்கிறார்கள். இவர்களை இது போன்ற விஷயங்கள் காந்தம் போல கவர்ந்திழுக்கின்றன. டேட்டியோ பிரபலமாக இதுவும் ஒரு காரணம்'' என்றார்கள் நம்மிடம் பேசிய அந்த ஐ.டி. நண்பர்கள்.`அந்த டேட்டியோ காட்சியை நாமும் பார்க்க முடியுமா?' என்று நைஸாகக் கேட்டோம் (ஆசை தோசை அப்பளம் வடை).
``ஸாரி சார்! (அடப்பாவி!) அதற்கு சான்ஸே இல்லை. எங்களுடைய நண்பர்கள் வட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறோம். அதில் இரண்டு பேருக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதுவும் சும்மா இல்லை. ஏகப்பட்ட முயற்சிகள் செய்து, சோர்ந்து சுண்ணாம்பான பிறகுதான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த பாக்கியம் கிடைக்காத மற்ற ஐந்து நண்பர்களும் அந்த டேட்டியோவுக்காக தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் ஐம்பதாயிரம் ரூபாய் தரக்கூடத் தயாராக இருந்தார்கள். ஆனால், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும், அந்த டேட்டியோவைப் பார்க்க முடியவில்லை. அந்தக் கடுப்பில்தான் இவ்வளவு விஷயங்களையும் உங்களிடம் போட்டு உடைக்கிறோம்'' என்றனர் அவர்கள்.`சரி! டேட்டியோவைப் பார்த்ததாகச் சொல்கிறீர்களே? அதில் அப்படி என்னதான் பார்த்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா?' என்று கேட்டோம்.

``கண்டிப்பாகச் சொல்கிறோம். மிதமான வெளிச்சம். பெரிய அறைக்குள் ஆறு இளம்ஜோடிகள் உட்கார்ந்து உற்சாகமாக அரட்டை அடித்தபடி உயர்ரக மதுவகைகளைக் குடிக்கிறார்கள். ஆண்களுடன் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். அதன்பின் போதை தலைக்கேற அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. அதன்பின் அத்தனை பேரும் முழுக்க முழுக்க நிர்வாணமாகக் கூத்தடிக்கிறார்கள். அதில் மூன்று ஜோடிகளின் முகங்கள் மட்டும் ஆரம்பத்திலிருந்தே மறைக்கப்பட்டுத் தெரிகிறது. ஆனால் மறைக்கப்பட வேண்டிய பாகங்கள் எல்லாம் நிர்வாணமாக இருக்கிறது.

கேமிராவை ஒரே இடத்தில் பொருத்தி, ஒரே கோணத்தில் படமெடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ஓரளவு டாப் ஆங்கிளில் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. டைட்குளோசப் மாதிரியான ஷாட் எதுவும் அதில் இல்லை. ஆனால் படம் மிகமிகத் தெளிவாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு விலையுயர்ந்த டிஜிட்டல் கேமிராவைக் கொண்டு அந்தக் கூத்துகளை அவர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடித்தபின் அதை கம்ப்யூட்டரில் போட்டு எடிட் செய்து முகங்களை மறைத்து ஒரு மணிநேரம் ஓடக்கூடிய டேட்டியோவாக அதை மாற்றி உலவ விட்டிருக்கிறார்கள்'' என்று மிகத் தெளிவாக தாங்கள் பார்த்த ரகசியத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

மிதமிஞ்சிய பணம், அது தரும் தைரியம், த்ரில், சவால் போன்ற காரணங்களுக்காக ஐ.டி. துறையில் உள்ள குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு விஷக் கலாசாரத்தை உருவாக்குவதையும், அது சென்னையில் பரவி இங்குள்ள இளைஞர், இளைஞிகளைக் கெடுப்பதையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது போலீஸாரின் கடமை மட்டுமல்ல; அனைவரின் கடமையும்கூட.

இரா. பாலஜோதி நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...


- பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

http://tmmk.in/news/999603.htm

அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடா தவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.

இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:

“துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.

இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்பு களும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரி னால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னி கரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால் கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளி வாக வெளிப்படுத்துகின்றது.

“மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு வருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக் காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள். அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்ல வனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர் கள் தோற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?

நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற் கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்து வத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்.


மதமாற்றம் பற்றி...

தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத் தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா வில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டு மெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

“இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல. வறுமை, எழுத் தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய் வது நமது கடமையாகும்’’.

சாதியத்தை போற்றும் கோல்வால்கர்

இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக் களில் இந்துத்துவத்தின் பிதாம கன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள் ளார். அவர் எழுதுகிறார்:

பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள் ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமை யையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.

திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத் தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல் வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது. இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத் தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்பு ணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும். ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்து வம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது. பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன. இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தின ருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன் றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார் கள். ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த் தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)


2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)


3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)


4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)


5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)


6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)


7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)


8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)


9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)


10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)


11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)


12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)


13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)


14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)


15. சிக்கா பாரதி (21 லட்சம்)


16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)


17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)


18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)


19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)


20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)


21. வனவாசி கல்யாண் ஆசிரம்22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)


23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)


24. சங்கல்ப்


25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)


26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)


27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)


28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)


29. சேவா பாரதி


30 பாரதீய விசார் கேந்திர்


சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.