.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label ஓரினச் சேர்க்கை. Show all posts
Showing posts with label ஓரினச் சேர்க்கை. Show all posts

Tuesday, July 7, 2009

ஓரினச் சேர்க்கை: மத்திய அரசின் ஆதரவு போக்கை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு:
மத்திய அரசைக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்களது பாலியல் முறைகேடுகளுக்கு வடிகால் தேடும் போக்கு'' ஆகியன பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Monday, July 6, 2009

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக நாளை 06.07.2009 ல் தமுமுக ஆர்ப்பாட்டம்.


ஓரினச் சேர்க்கைக்கு எதிராக 149 அண்டுகளாக இருந்து வந்த ஐ.பி.சி 377வது சட்டப்பிரிவு செல்லாது என, டில்லி நீதி மன்றம் சமீபத்தில் தீர்பளித்தது.

இதனடிப்படையில் அருவருக்கத்தக்க இந்த ஓரினச் சேர்க்கையின் செயலை ஆதரித்து இந்திய அரசு ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்தால் இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு அனுமதி அளித்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விலக்களித்த 127வது நாடாக இந்திய இடம் பிடிக்கும்.

இறைவனின் படைப்பில் மனிதன் முதல் விலங்குள், தாவரங்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் அனைத்தும் அதற்கு அனுமதிக்கப்பட்ட இயற்கை வரையில் தான் தனது இல்லற சுகத்தையும் இனவிருத்தியையும் பெருக்குகின்றன குறிப்பாக தாவர இனங்களின் உற்பத்திகூட ஆண் ‍பெண் சேர்க்கை என்ற விதியின் படி‍யே விளைச்சல்கள்மேம்படுகின்றன.

இயற்கை விதி இவ்வாறு இருக்க மனித குலத்திற்கு எதிரான, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை ‍அளிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - இன்ஷா அல்லாஹ் 06.07.2009 அன்று மாலை 4.00 மணிக்கு – சென்னை சென்ரல் மெமோரியல் ஹால் அருகில் -

அனைவரும் வருக
அழைக்கிறது தமுமுக.