- HUSSAINGHANI
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் கடந்த வாரம் நீண்ட தூர மற்றும் நடுத்தர ரகத்தைச் சேர்ந்த 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவிச் சோதனை நடத்தியுள்ளது. இவை நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும். உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்லும் ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம். இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.
இந்த ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூஸைன் சலாமி கூறுகையில் சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடியாக எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம்.
பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கும் உள்ளது. எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர். எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்று கூறினார்.
இதனிடையே ஈரானின் இந்த ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணுஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் புஷ் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கும்படியும் இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளார். இருந்தாலும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகளை அந்தப் போரில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் அத்துடன், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை, இஸ்ரேல் படைகள் பயன்படுத்தவும் அனுமதிக்கமாட்டோம் எனறும் அமெரிக்க ராணுவ அமைச்சக அதிகாரிகள் அறிக்கைகள் பறக்கவிட்டுள்ளனர்.
ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?
இஸ்ரேலிடம் இருக்கும் மிகக் கொடுரமான பேரழிவு ஆயுதங்கள் ஈரானுக்கு மட்டுமல்ல எல்லா அரபுநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இஸ்ரேல் இருக்கிறது. எகிப்தின் ஒரு பகுதியையும், லெபனானின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அதுதான் வேதகாலம் சொல்லும் தங்கள் புனித பூமி என்று இஸ்ரேல் பஞ்சாங்கங்களைப் புரட்டுகிறது. இன்றைக்கு அந்த நாடு அமெரிக்காவின் நிழலில் இருக்கிறது. உலகம் அந்த நாட்டை அங்கீகரித்து விட்டது.
ஆனால், தங்கள் கண்முன்னே பறிபோன தங்கள் தாய்பூமியை மீட்பதில், இஸ்ரேலைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டு இளைஞர்கள் துடியாய் துடிக்கிறார்கள். பறிபோன நாட்டை மீட்க போராடுபவர்களுக்குப் பெயர் தீவிரவாதிகள். அராஜகமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலியர் ராணுவவீராகள் என்று ஊடகங்கள் ஊலையிடும். அதையும் உலக மக்கள் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலிடம் 54க்கும் அதிகமான அணுகுண்டுகள் இருக்கின்றன. அவைகளை அந்த நாடே உற்பத்தி செய்ததா? அமெரிக்கா கொடுத்து உதவியதா? இதுவரை ஆயிரத்து முப்பத்துநான்கு முறை அமெரிக்கா அணுகுண்டுச் சோதனை செய்திருக்கிறது. அதில் இஸ்ரேலுக்காகவும் சோதனை செய்திருக்கிறதா? இப்படி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. உறுதியாக, அந்தக் குண்டுகள் அரபு நாடுகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். இந்த நிலையில், ‘அணுகுண்டு ஆபத்து, அதனைச் செய்யாதே பரிசோதிக்காதே ராசா’ என்று ஈரானுக்கு மட்டும் புத்திமதி சொல்வது எந்த வகையில் நியாயம்?
ஈரான், அணு ஆயுத வல்லரசாக உருவாவதை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், இஸ்ரேல் அணு ஆயுத வல்லரசாக இருக்கிறதே? எவ்வளவு பெரிய அழிவு ஆயுதங்களை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது என்பதனை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில், அண்டையிலுள்ள லெபனான் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. ஒரு மாத காலம் யுத்தம் நடத்தியது. அந்த யுத்தத்தில் கந்தகக் குண்டுகளை வீசி மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய குண்டுகளை வியட்நாம் மீது முன்னர் அமெரிக்கா வீசியது. இப்போது லெபனான் மீது இஸ்ரேல் ஏவியிருக்கிறது. கடுகளவு கந்தகம் உங்கள் உடம்பில் பட்டால் என்னவாகும்?
அந்த இடம் அப்படியே வெந்து போகும். வேதனையால் துடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆறாத காயங்களோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். சக்தி வாய்ந்த அந்த அழிவு சக்திகளை குண்டுகளாகச் செய்து, லெபனான் மீது இஸ்ரேல் வீசியிருக்கிறது.
கந்தகக் குண்டுகள் செய்வதை சர்வதேசச் சட்டம் தடை செய்யவில்லை. ஆகவே, அந்தக் குண்டுகளைச் செய்து, லெபனான் மண்ணின் மீதும் மக்கள் மீதும் வீசினோம் என்று இஸ்ரேல் வக்கிரவாதம் பேசியது.
இறக்கும் வரை மனிதனைத் துடிக்கவிடும் இத்தகைய குண்டுகள், அப்போது உருவாக்கப்படவில்லை. ஆகவே, சர்வதேசச் சட்டம் அதனை அன்றைக்குத் தடை செய்யவில்லை. அம்மையார் ஜகாவா என்ன கேள்வி எழுப்பினார்? ‘பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டுபோட்டீர்கள். போர் மரபுகளுக்குப் புறம்பாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குண்டு போட்டீர்கள். அந்தக் குண்டுகளெல்லாம் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட நாசகார ஆயுதங்கள். அவைகளின் அழிவு சக்திகளைக் கணக்கிட, மக்கள் குடியிருப்புக்களையே நாசமாக்கினீர்களா?’ என்று அந்த அம்மையார் கேட்டார். ‘கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா?’ என்றார். காஸாப் பகுதியில் வீசப்பட்ட நவீன ஆயுதங்களைப் பற்றிக் கேட்டால், ‘புதிதாய் செய்த கந்தகக் குண்டுகளை லெபனான் மீது வீசி, சோதித்துப் பார்த்தோம்’ என்று அமைச்சர் பதில் சொன்னார்.
எங்கே விழப்போகிறோம் என்று தெரியாத இடியைப்போல, லெபனான் மீது இஸ்ரேல் வீசிய கந்தகக் குண்டுகள் விழப்போகும் இலக்குத் தெரியாது மக்கள் குடியிருப்புக்கள் மீதே மழையாய்ப் பொழிந்தன. கந்தகத் தீயில் மக்கள் துடியாய்த் துடித்தனர். இது என்ன புதிய அழிவு ஆயுதம் என்று புரியாது தவித்தனர். அவைகளெல்லாம் இஸ்ரேல் ராணுவப் பாசறை உருவாக்கிய கந்தகக் குண்டுகள் என்பதனை இப்போது இஸ்ரேலே தெரிவித்திருக்கிறது.உலகம் வியப்பால் முகம் சுளித்து நிற்கிறது.
லெபனான் மீது கந்தகக் குண்டுகளை மட்டும் வீசவில்லை. கொத்துக் கொத்தான குண்டுகளையும் வீசியிருக்கிறது. இது இன்னொரு வகையான அழிவு ஆயுதம். ஒரே குண்டு வெடித்து, அதிலிருந்து ஐம்பது, நூறு குண்டுகள் சிதறும். அவைகளும் வெடிக்கும். அதன் அழிவு பயங்கரமாக இருக்கும்.மரபுகளுக்கு விரோதமான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று லெபனான் யுத்தத்தின்போதே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவைகளை அன்று இஸ்ரேல் மறுத்தது. அதன்பின் ஒப்புக்கொண்டது.
இன்றைக்கும் இஸ்ரேல் வம்புச்சண்டைக்குப் போகிறது.
இஸ்ரேலோடு ஒப்பிடும்போது, எல்லா இஸ்லாமிய நாடுகளும் நிராயுதபாணிகள்தான்.
இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் உள்ளன. எந்த இஸ்லாமிய நாட்டிலும் அணுகுண்டு இல்லை.
மிகப் பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.
எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை.
தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரால், லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்கிறது. சிரியா மீது படையெடுக்கிறது. எல்லை தாண்டி அதன் ராணுவம் செல்கிறது. விமானக் குண்டுவீச்சுக்கள் நடைபெறுகின்றன.
இன்றைக்கு இஸ்ரேலின் ஆயுத வலிமை என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏவுகணைகளையும் ஏவுகணைச் சாதனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. அதற்காக அன்றைய அதிகாரபீட அரசியல் பிரமுகர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கையூட்டு அளித்திருக்கிறது.
இப்போது இலங்கையும் அங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறது. இப்படி ஒரு சின்னஞ்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கே ஆயுதம் விற்கும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கிறது. அத்துடன், அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது. ஆனால், அதற்குப் பக்கத்தில் உள்ள ஈரான் அணு ஆயுதச் சோதனை செய்தால், உலகச் சமாதானத்திற்கே உலை வைக்கிறது என்கிறார்கள். என்ன நியாயம் இது??
எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது. இருக்கின்ற அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அதனை விடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நியாயம். அதன் அண்டை நாடுகளுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் பேசக் கூடாது.
அணுகுண்டுகளைவிட ஆபத்தான கந்தகக் குண்டுகளையும், அக்கினிக் குண்டுகளையும் இஸ்ரேல் தயாரிக்கிறது. அதனைத் தயக்கமின்றி பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் வீசுகிறது. அந்தக் குண்டுகள் நாளை வளைகுடா மண்ணிலும் வீசப்படலாம்.அணுகுண்டு, மனித இனத்தை நொடிப்பொழுதில் அழித்துவிடும். ஆனால், கந்தகக் குண்டுகளும் அக்கினிக் குண்டுகளும் மரிக்கும் வரை மனித இனத்தை உயிரோடு போராட வைக்கும். ஐ.நா. மன்றமும் உலக சமுதாயமும் என்ன செய்யப்போகிறது? மவுனம் தான் பதிலா???
No comments:
Post a Comment