சவூதி அரேபியவில் பணிபுரியம் நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கிறீர்களா?
அல்லது வாகன ஓட்டுனரா?
நீங்கள் தெரிய வேண்டியவைகள் சில...
அல்லது வாகன ஓட்டுனரா?
நீங்கள் தெரிய வேண்டியவைகள் சில...
- எம். ஹூஸைன் கனி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடந்த சில தினங்களுக்கு முன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்கள் சிலருக்கு ஒரே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கான அபராத தொகை விதிக்கப்பட்டு அலுவலக தொலைநகல் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்று அதிர்ச்சி அடைந்தோம் காரணம் அந்த விதி மீறல் பற்றி அந்த வாகன ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வில்லை. அவர் வாகனத்தில் மிதமாகச் சென்றதாகச் சொன்னார் ஆனால் மெதுவாக (140 kmph க்கு மேல்) பறந்திருக்கிறார். அந்த வாகனம் அரசு துறைக்குச் சொந்தமான வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் விமுறைகளுக்குட்பட்டதல்லவா? உடனே துறையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது துறைசார்ந்த பணிகளுக்கு வாகனங்களை பயன்படுத்து வோர் விதி முறைகளுக்குட்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் மீறினால் அபராதத்தொகையை அவரது சம்பளத்திலிருந்து வெட்டப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே நமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை அதிநவீனமயமாக்கி உள்ளது அது போல் குற்றங்களுக்காக அபராதமும் கடுமையாக்கப்பட்டுள்ளது அது பற்றிய ஒரு பார்வை.
சவூதி அரேபியாவின் முக்கிய 8 நகரங்கள் போக்குவரத்து கண்கானிப்பு முறைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது அதன் மூலம் போக்குவரத்து குற்றங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் அதிக வேகம் செல்லும் வாகனங்கள் அதி நவீன டிஜிட்டல் கேமராக்கள் மூலம் நீங்கள் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் உங்களது வாகனம் / நீங்கள் பயணித்த சாலை / தேதி- நேரம் ஆகியவைகளுடன் புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக தேசிய தகவல் பாதுகாப்பு மைய கணனியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு அந்த வாகன உரிமையாளரின் பெயரில் அபராத தொகை கணக்கீடு செய்து உடனே அவரது கண்கில் அமலுக்கு வந்து விடும். அந்த அபராத தொகையை பதிவு செய்த ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறினால் அடுத்த மாதம் அபராத தண்டத் தொகையில் எது அதிகமோ அவை உங்களது கணக்கில் பதிவாகி விடும். அந்த தண்டத் தொகையை நீங்கள் கட்டியே தீர வேண்டும்.
நகரின் பிரதான சாலைகளில் வாகனங்களில் பறக்கும் நீங்கள் உங்கள் கண் முன்னே போக்குவரத்து காவலர் இல்லையே என்ற இறுமாப்பில் நீங்கள் வாகனங்களில் பறந்தால் அபராதம் நிச்சயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நகர் முழுதும் SAHER என்று சொல்லக்கூடிய automated traffic control and management system uses the technology of digital cameras network linked with the National Information Center of Ministry of Interior தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது போல் சிக்னல்களை (சிகப்பு விளக்கை) கடந்து செல்லும் வாகனங்களும் மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாகனத்தின் முன் பின் பக்கங்கள் மற்றும் ஓட்டுனரின் முகப்படத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்டு அபராதம் பதிவாகி விடும்.
இதில் முக்கியமாக தெரிய வேண்டிய விபரம்:
நகர் முழுதும் செயற்கைகோள் உதவியுடன் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர் யாரும் தப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண் பிளேட்டுகளில் "சிப்" பயன்படுத்தப்பட்டுள்ளது அவை எந்த நிலையிலும் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். தாங்கள் பணியாற்றும் கம்பெனியில் மக்கா செல்வதாக வாகனத்தை எடுத்து நீங்கள் ஜித்தா சென்று சுற்றித்திரிந்தால் மாட்டிக் கொள்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வாகனங்கள் திருடு போய்விட்டால் அல்லது கடத்தப்படட்டால் GPS தொழில்நுட்பமுறையில் கண்டுபிடிப்பதற்காக இந்த நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் உங்களது தொடர்பு தகவல்களை உடனே பதிவு செய்து கொள்ளுங்கள் அதன் மூலம் உங்களுக்குத் தெரியமல் நடந்து விடும் அபராதம் மற்றும் தண்டத் தொகையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். தகவல்களை பதிவு செய்துள்ளவர்கள் தங்களது விபரங்களை அறிய 01 2928888 என்ற எண்னுக்கு அழைத்து தெரிந்து கொள்ளவும் அல்லது SMS மூலம் உங்களது இக்காம எண்னை (உ.ம்) *56*1234567890* to STC 88993 or Mobily 625555 என்ற எண்னுக்கு SMS செய்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் தகவல்களை பதிவு செய்யவில்லையா? SMS மூலம் பதிவு செய்யது கொள்ளுங்கள் ஒரு SMS க்கு 2.5 சவுதி ரியால் கட்டணம்.
உங்கள் இக்காம எண்*வாகன ஓட்டுனர் உரிமம் காலாவதி நாள் *வாகன பதிவு (இஸ்திமாரா) காலாவதி நாள் * ஸ்பேஸ் இல்லாமல் காலாவதி தேதிகளை ஹிஜ்ரி வருட கணக்கில் குறிப்பிடவும் STC 888993 or Mobily 623333 என்ற எண்னுக்கு SMS செய்து பதிவு செய்து கொள்ளவும் SMS அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு பதிவு செய்த தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.
வாடகை வாகனத்தை எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கும் இதே விதி பொருந்தும் விதி முகைளை மீறி உங்கள் வாகனம் சென்ற அடுத்த வினாடியே வாடகை வாகன நிறுவனத்திற்கு SMS மற்றும் மின் அஞ்சல் மூலம் அபராத தகவல் சென்று விடும் அதற்கு நீங்களே பொருப்புதாரி என்பதை மறக்க வேண்டாம்.
கம்பெனி மற்றும் வீடுகளில் வாகனம் ஓட்டுபவர்களே உங்களின் மேலான கவனத்திற்கு!
ஒரு வீட்டில் / கம்பெனியில் பல வாகனங்கள் இருக்கக்கூடும் பல ஓட்டுனர்கள் சில நேரங்களில் வகனங்களை மாற்றி எடுத்து பயன்படுத்துவார்கள் அபராத தொகை வாகனத்தின் உரிமையாளர் பெயரில் வந்து விடும் அந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு வர காலதாமதம் ஆகலாம் அதனால் தண்டத் தொகை செலுத்த நேரிடும் தவறு செய்தது யார் என்று உங்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன ஆகவே பல பேர் பயன்படுத்தும் வாகனம் என்றால் ஒவ்வொரு மாதமும் அட்டவனை போட்டு நீங்கள் வாகனத்தை எடுக்கும் தேதி மற்றும் நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு சரியாக மொழி தெரியாத காரணத்தால் தெளிவாக பேசி விளக்கத் தெரியாமலிருக்கலாம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
நகரின் முக்கிய சாலைகளில் வேகத்தின் விகிதம் வரையறுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே 60, 70, 80 மற்றும் 120 kmph என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் நான்கு வழி விரைவுச் சாலையான King Fahad Express high way யிலும் ஒரே சாலையில் ஒவ்வொரு வழிக்கும் 120, 80, 60 என விதி உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
சாலையில் வாகனத்தை செலுத்தும் முன் அந்தச் சாலையின் விதிமுறைகளை பின் பற்றிச் செல்வது உங்களுக்கும் உங்களை நேசிக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் உங்களைச் சார்ந்த சமுதாயத்திற்கும் நலம் பயக்கும்.
வல்ல ரஹ்மான் உங்கள் பயணத்தை இனிமையானதாக்கிட துவாச் செய்கிறேன்.

3 comments:
தகவலுக்கு நன்றி
இது தற்போது ரியாத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் , மற்ற நகரங்களுக்கு படி படியாக செய்லாக்கப்படும் என்று கேள்விப்பட்டேன் உன்மையா?
தற்போது ரியாத்தில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் 8 முக்கிய நகரங்களில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment