

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
இச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக  துறைகளில்  இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த  உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின்  அடிப்படையில்  வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது  சிவப்பு, மஞ்சள்,  பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என  நிர்ணயித்துள்ளது. இதில்  சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு  தொழிலாளர்கள் மிகவும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.
இந்தத்திட்டத்தின்  கீழ் பாதிப்புக்குள்ளகி இருக்கும் இந்தியர்கள்  அவர்களின் நிலையை அறிந்து  கொள்ளும்வகையில் அவர்களின் (இக்காமா) குடியுரிமை  அடையாள அட்டை எண் மூலம்  தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தின் உதவியுடன்   அவர்களுக்கு விளக்கம்  மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகமாக நிடாகத்  விழிப்புணர்வு முகாம் 5  நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2  நாட்களாக நடைபெற்று வரும்  இந் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வெளிநாட்டு  தொழிலாளர்கள் பயன்பெற்று  வருகின்றனர் தொடர்ந்து எதிர்வரும் 24-12-2011ம்  தேதி வரை நடைபெரும் இந்த  முகாமில் பல லட்சம் தொழிளாலர்கள் பயன்பெறுவார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
ரியாத் நகரில் உள்ள நெஸ்டோ ஹைப்பர்  மார்க்கெட்டில் அந்நிறுவனத்தின்  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்  நிகழ்ச்சியை ரியாத் மண்டலத்தில்  செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகம், Pleaceindia  மற்றும் Sauditimes Magazines  ஒறுங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி  வருகிறது.