.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label சவூதி அரேபியா. Show all posts
Showing posts with label சவூதி அரேபியா. Show all posts

Monday, April 16, 2012

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!


அடிமைத்தளையை வேரோடும் வேரடி மண்னோடும் 1433 ஆண்டுகளுக்கு முன்பே தகர்ந்தெரிந்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். அந்த இஸ்லாம் முழுமையடையப்பட்டு உலகமுழுதும் பரவ காரணமான அரபுமண்னில் அடிமைத்தனத்தின் வாடை இன்னும் வீசுவது மனித ஆர்வளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சவாலாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைத்தரணியிலிருந்து தனது 20வது வயதில் 400 ரியால் சம்பளத்திற்கு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு வந்துள்ள சகோதரி மும்தாஜ் பேகம் என்பவர், அவர் வந்து 10 மாதங்கள் மட்டும் சம்பளம் பெற்றுள்ளார். அதன் பின் சம்பளமும் இல்லை, அவரை ஊருக்கும் அனுப்பவில்லை. 20 வருடங்களாக சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில் அவரது தந்தை சாலிஹா சகாப் தாயார் சாகிரா பீவி ஆகியோர் மரணமடைந்த செய்தி கிடைத்தும் அந்த ஸ்பான்சர் அந்த சகோதரியை தனது நாட்டிற்கு அனுப்பவில்லை. சகோ மும்தாஜ் பல முறை வீட்டை விட்டு ஓடி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தும் பலன் இல்லை. இதோ அனுப்பி விடுகிறேன் என்று காவல் நிலையத்திலிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவர். இப்படியே 20 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வந்த அந்த சகோதரியைப் பற்றிய தகவல் தமுமுகவோடு சமுதாயப்பணியில் இணைந்து செயலாற்றும் கேரளாவைச் சேர்ந்த சகோதரர்களின் pleaceindia என்ற அமைப்பிற்கு தகவல் கிடைக்க உடனே தமுமுகவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எப்பவும் போல் இந்த புகாரை எடுத்துக் கொண்டு இந்தியத் தூதரகம் சென்றோம். சில நேரங்களில் சில வேலைகள் எளிமையாக முடிந்து விடும் சில நேரங்களில் அதற்குரியமுறையில் அணுக வேண்டி வரும். அந்த வகையில் இந்த வழக்கிலும் நமது அணுகுமுறையை வித்தியாசமாக கடைப்பிடிக்க வேண்டி வந்தது. இந்தப் புகாரை கொண்டு சென்றவுடன் வழக்கம் போல் "எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்கிறோம்" என்ற பதிலே கிடைத்தது. இறைவன் உதவியால் இந்த வழக்கில் சாதிக்கவேண்டும் என்று தமுமுக களத்தில் இறங்கியது. முறையாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். டிப்லோமெட் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் கையாளப்பட்டது.

மனித உரிமை ஆணையம், கவர்னரேட், காவல்துறை உயர் அதிகளாரிகள் போன்ற அனைத்து துறைகளிலும் முறையிட்டு உரிய நடவடிக்கை்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

மண்டல தமுமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தூதரகத்திலிருந்து டாக்டர் முஹம்மது அலீம் தலைமையில் தூதரகக்குழு ஹைல் சென்று முகாமிட்டு அடிமையாக சிக்கித்தவித்த சகோதரி மும்தாஜ் மீட்கப்பட்டு அவரது ஸ்பான்சர் கைது செய்யப்பட்டார். 70 ஆயிரம் ரியால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சகோ மும்தாஜூக்கு 19 ஆண்டுக்கான இக்காம அடிக்க வேண்டி உள்ளதால் அதன் பணிகளும் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் இருந்ததால் காலாவதி ஆகிவிட்டபடியால் அதன் பணிகளும் இன்றும் சில பேப்பர் வேலைகளும் பாக்கி இருப்பதால் அவைகள் முழுமையாக முடிந்தவுடன் இன்ஷா அல்லாஹ் ஒருவார காலத்தில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகத்தில் தற்போது அவருக்கு இருக்கும் அவரது ஒரே உறவினரான சித்தி சதிரா அவர்களை தமுமுக, சவூதி அரேபியா மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனி தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்தி உள்ளார் மிகுந்த மகிழ்ச்சி அடைத்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே......

இந்த மீட்புப்பணியில் பெரிதும் உதவிய இந்தியத் தூதுவர் மரியாதைக்குறிய ஹாமித் அலி ராவ் தூதரக அதிகாரிகள் டாக்டர் முஹம்மது அலீம், சகோதரர் விவேகானந்தன் மற்றும் காவல்துறை லெப். கர்ணல். பஷீர் அஹமது அல் அன்ஸி மற்றும் மனித உரிமை ஆணைய அதிகாரிகளுக்கு மத்திய மண்டல தமுமுகவின் சார்பாக முறையே நன்றிக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மேலும் ஒரு மணிமகுடமாகும். .. .. .. . . எல்லாப்புகழும் இறைவனுக்கே...

ஹூஸைன்கனி, ரியாத்.

Sunday, September 4, 2011

சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...

- ஹூஸைன்கனி


சவூதியில் "ஹுரூப்" "Run away " "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதென்ன சட்டம்... "ஹூரூப்"...?

"ஹூரூப்" என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், உதாரணமாக ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை 'ஜவாஸாத்தில்' (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்... சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்... போன்ற அவலநிலை நிலவுகிறது.

இதுபோன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று...

சவூதி அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்) இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல், 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி...

'முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது (!?)' என்று வியந்து பாராட்டினார். 'இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்' என்று சொல்லிய அமைச்சகம் 'முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இன்று செப்டம்பர் 3-ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.Talmiz Ahmad தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் Mr.Hamid Ali Rao எதிர்வரும் 15-ம் தேதி பொறுப்பெடுக்க உள்ளார். புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அதனடிப்படையில் http://www.hurub.com/ என்ற இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.


சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள http://www.hurub.com/ இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகப்படலாம்.

குறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்..! முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்..! 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..!

Monday, February 2, 2009

சவூதி அரசருக்கு ஈரான் அதிபரின் கடிதம்! சியோனிஸ கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான நிலைபாட்டை எடுப்பீர்கள் என....

சவூதி அரசருக்கு ஈரான் அதிபரின் கடிதம்!

சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, 22 நாட்களாக கஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும் எனக் கோரி ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத், கஸ்ஸா படுகொலை உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது சவூதி அரசருக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகள்:

அளவற்றக் கருணையாளனான அல்லாஹ்வின் பெயரால்...!

சவூதி அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூத் அவர்களுக்கு,

அல்லாஹ்வின் கருணையும் அருளும் உங்கள் மீது எப்பொழுதும் பொழியட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

நிரபராதிகளும் உதவி செய்ய எவருமில்லாதவர்களுமான கஸ்ஸாவிலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக, நாகரீமற்றவர்களான சியோனிச அரசு அக்கிரமும் அராஜகமுமான ஆக்ரமிப்பைத் துவங்கி இன்றோடு 19 நாள்கள் கடந்து விட்டன என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

தரை, கடல், ஆகாய வழியிலான அனைத்து வழிகளும் இறுக்கப் பூட்டப் பட்டு, எல்லா வழிகளும் அடைக்கப் பட்ட நிலையில் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதலையும் கஸ்ஸா மக்கள் எதிர்கொள்கின்றனர்.

பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் உட்பட சாதாரண அப்பாவி மக்கள் தங்களின் சொந்த மண்ணில் வைத்து கருவறுக்கப் படுகின்றனர். கஸ்ஸாவில் நடக்கும் நிகழ்வைக் கண்ணுறும் எவரது இதயமும் வெடிக்கும்; மனதில் தீப்பிடிக்கும்.

ஜனநாயகத்தின் காவலர்கள், மனித உரிமைகளின் பிறப்பிடம் எனத் தன்னைத் தானே உரிமை கொண்டாடும் வன்சக்திகள், சியோனிஸ அரசுக்கு ஆயுத சப்ளை செய்து ஆக்ரமிப்பும் இன அழிப்பும் செய்வதற்காக மட்டுமே இத்தகைய நரமாமிசம் உண்ணும் அரசை இங்கு உருவாக்கினர். இஸ்ரேலின் செயல்களுக்குக் கண்ணை மூடி ஆதரவு நல்குவதோடு, குற்றங்கள் செய்வதற்குத் தேவையான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளை விலைக்கு வாங்கி வைத்திருக்கின்றனர்.

வன்சக்திகளின் செயல்பாடுகளிலும் அவர்களின் செய்திகளிலும் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், முன்பு எப்பொழுதும் இதுவரை நடந்திராத அளவிற்கான இந்த இன அழிப்பை, கண்டும் காணாதது போன்று நடிக்கும் இஸ்லாமிய-அரபு அரசுகளின் நடவடிக்கைகள் ஆச்சரியம் அளிக்கக் கூடியவை! வருத்தமளிக்கக் கூடியவை!.

எதிர்த்து நிற்பதற்கு எதுவுமே இல்லாத ஒரு சமூகம், தங்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக எங்கிருந்தாவது திடமான ஓர் எதிர்ப்புக் குரல் கேட்காதா என்று ஏங்கி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆக்ரமிப்பாளர்களின் மிருகச் செயல்பாடுகளின் முன்பு தலை கவிழ்ந்திருக்கும் நம்மை இறைவன் மன்னிக்கட்டும்.

சியோனிஸ அரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது நாமனைவரும் தெரிந்த ஒன்றாகும். நிராசையின் காரணத்தினாலேயே அவர்கள் இப்பொழுது அராஜகம் புரிகின்றனர். சுதந்திரமாகச் சிந்திக்கும்-பேசும் அனைத்து மக்களும் நாடுகளும் சியோனிஸ அரசின் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் உயர்த்தி விட்டனர்.

சவூதி அரசரும் புண்ணிய பூமிகளான மக்கா-மதீனாவின் பாதுகாவலரான தாங்கள், இக்கொடுமையான நிகழ்வில் காட்டும் மௌனத்தைக் கலைப்பீர்கள் எனவும் இஸ்லாமிய சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமான குழந்தைகளைக் கொன்றொழிக்கும் சியோனிஸ கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான நிலைபாட்டை எடுப்பீர்கள் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

இதன் மூலம் முஸ்லிம் உலகத்தில் பிரிவினை விதைகளைத் தூவலாம் என ஆசை கொள்ளும் வன்சக்திகளின் எதிர்பார்ப்பைத் தகர்க்கத் தங்களின் உறுதியான நிலைபாட்டினால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

சுதந்திர வேட்கையுள்ள கஸ்ஸாவிலுள்ள வீரப் போராளிகளின் தீரமான போராட்டத்திற்கு வெற்றியளிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். சியோனிஸ அரசு போன்ற கொடுமையாளர்களை அவன் அழிப்பான் எனவும் நான் அவன் மீது ஆதரவு வைக்கிறேன்.

அன்புடன்,

மஹ்மூத் அஹ்மதி நஜாத்.