.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, July 10, 2009

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் 50 ஆயிரம் வழங்கினார்.

மறு கூட்டல் மூலம் முதல் இடம் பிடித்த பிளஸ்2 மாணவருக்கு ரூ.50 ஆயிரம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னை, ஜூலை. 10 பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் பாலமுருகனுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் வழங்கினார்.



பிளஸ்-2 மறு கூட்டல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் நெல்லை ரமேஷ் (நெல்லை மாவட்டம்), எம்.லிங்கேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்), கே.சி.சிஞ்சு (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஏ.பிரவீன் (கரூர் மாவட்டம்) ஆகிய 4 பேர் தலா 1200 மார்க்குக்கு 1183 மார்க் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.

பிளஸ்-2 தேர்வில் உள்ள விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவ - மாணவிகளுக்கு புதிய மார்க் குகள் அனுப்பப்பட்டன.

மாணவர் பாலமுருகன் முதலிடம்
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகனும் ஒருவர். அவர் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர். அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பு எடுத்த மொத்த மதிப்பெண்கள் 1176. அவர் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ்-187, ஆங்கிலம்-193, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-197, உயிரியல்-199.

ஆனால் அவர் தமிழில் மார்க் குறைந்து இருப்பதாக எண்ணி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அப்போது அவருக்கு கூடுதலாக 8 மார்க் கிடைத்தது. அதாவது தமிழில் 195 மார்க் கிடைத்தது.

இதன் மூலம் இவருடைய மொத்த மதிப்பெண்கள் 1184 ஆக மாறியது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட பாலமுருகன் ஒரு மார்க் அதிகம் பெற்றுள்ளார். விடைத்தாள் மறுகூட்டல் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த மாணவர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட ஒரு மார்க் கூடுதலாகவும் பெற்றுள்ளார் என்றால் இவர்தான் முதலிடம் பெற்ற மாணவர். இவரது விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருந்தால் தேர்வு முடிவுகள் தெரிந்த அன்றே இவர் முதலிடம் பெற்ற மாணவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பார் அந்த மகிழ்ச்சியை தவறு செய்த ஆசிரியர்கள் வழங்குவார்களா? அந்த நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை என்னிப்பார்க்கவேண்டும்.

விடைத்தாள்கள் திருத்தியதில் அலச்சியப்போக்காக இருந்த ஆசிரியர்கள் கைது செய்து தண்டிக்கப்படவேண்டும். அரசு அறிவிக்கப்பட்டுள்ளது போல் பணியிடை நீக்கம் தவறுக்கு தீர்வு ஆகாது.

மறு கூட்டல் மூலம் அதிக மதிப்பெண் பெற்றமாணவனின் இந்த செய்தி அறிந்த முதல் அமைச்சர் கருணாநிதி நேற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பாலமுருகனை தலைமை செயலகத்திற்கு அழைத்து பாராட்டி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதுமட்டுமல்ல பாலமுருகன் எந்த கல்லூரியில் படித்தாலும் படிப்பின் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் கருணாநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி செயலாளர் எம்.குற்றாலிங்கம், இயக்குனர் பி.பெருமாள்சாமி, இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி மற்றும் மாணவர் பாலமுருகனின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அந்த மாணவனுக்கு அரசு உரிய அங்கீகாரம் தந்தது ஆறுதலான விஷயம். இனியும் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் அரசு கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.

S.A. நவாஸுதீன் said...

மகிழ்ச்சியான செய்தி.