.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label ததஜ. Show all posts
Showing posts with label ததஜ. Show all posts

Thursday, July 7, 2011

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது.

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

கடற்கரையே இல்லாதா வேலூர் மாவட்டத்திற்கு கணக்கு எழுதியவர்கள் இவர்கள் இதோ ஆதாரங்கள்.

மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகள்.

சுனாமியின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து எதையும் அவர்கள் தொட்டதில்லை என்றும் பீற்றிக் கொள்ளும் ததஜவினரே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இதோ உங்கள் தலைமை வெளியிட்ட கணக்குகள்.

1. சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. எந்த பிரிண்டிங் வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன் இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். சிவகாசிக்கு போய் பிரிண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம் பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.

2. பாலிதீன் பைகள் 1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது அல்ல.

3. நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி. அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப் பணியாளர்கள். முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள் சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன் தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? அவர்கள் 20,000க்கு வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய கலரில் உள்ளது. சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005 மார்ச்சில். 2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே போய் சேர்ந்துள்ளது.

4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு? சுனாமி நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.

5. டெம்போ ஆட்டோ வகை 235.

6. டீ செலவு 30.

7. நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள். த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப் பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா?

8. ஆட்டோ கூலி 50.

9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள் இல்லை. ஒரு நபர் கூட இல்லை.

10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம் இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.

11. கூரியர் 309.

12. போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.

http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html

13. ஆட்டோ 97.

14. கடிதம் தபால் தலை 474.

15. ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.

16. போக்கு வரத்து 7725.

17. உணர்வு 2,00,000.

18. இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000.

19. ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால் ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000. த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து எடுத்து விட்டார்கள்.

20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள். 50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய் என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில் பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.

21. எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. அந்த நேரத்தில் டாண் டி.வி. எடிட்டிங் வகைக்கு என பிஜே மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து இருக்கலாம்.

22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.

தலைமை மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று தலைப்பிட்டு அவர்கள் 22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர். இதில் 21 வகையான செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவுகள் அல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி உள்ளார்கள்.

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.


அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.


விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.


அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.


கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.


பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்


சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா?

இதற்கிடையில் தமுமுகவின் உணர்வு பத்திரிக்கையையும் அதன் உடமையையும் திருடியவர்கள் இப்போது அதை அவர்கள் திருடிவிட்டார்களாம்!?

மக்களே யார் திருடர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

Wednesday, June 8, 2011

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்" என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.

அந்த அர்ச்சனைகளைப் படித்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்.... நன்மைகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடியவை அல்ல. அவர்களின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பகரமாக நமக்கு மறுமையில் நன்மையாக மாறும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நான் ஒரு முஸ்லிமாக நிச்சயமாக அவர்களை நான் மறுமையில் சந்திப்பேன் அப்போது என்னைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைக்கு இன்ஷா அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வேன்.

நாம் எடுத்து வைத்துள்ள நியாயமான கேள்விக்கு அவர்களின் பதிலை பாருங்கள்... அதுவும் மனிதநேயர் மக்கள் கட்சி என்ற பெயரில் ID

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது தனது அமைப்பையோ தன்னைப் பற்றிய அடையாளமோ தெரியாமல் போலி பெயர்களில் விமர்சியுங்கள் என்று அனுமதி அளித்து TNTJ தலைமை தனது கிளைகளுக்கு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு.....

பாருங்கள் இவர்களின் அயோக்கியத்தனத்தை....

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

Monday, April 6, 2009

ம னிதநேய மக்கள் கட் சி எங்கு போட் டி யி ட்டாலும், அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும். ததஜ அறிவிப்பு!

ம னிதநேய மக்கள் கட் சி எங்கு போட் டி யி ட்டாலும், அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

திமுக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டில் எததனையோ குளறுபடிகள் என்றும் ரோஸ்டர், பூஸ்டர் என்றும் அன்று திமுகவை கடுமையாக விமர்சித்த த.த.ஜ வினர் இன்று திமுக முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டின் காரணமாக வரும் மக்களவை தேர்தலில் ஆதரவு என்றும் மனித நேய மக்கள் கட்சி எங்கு போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் கோவை அருகே போத்தனூரில் மாநில மேலான்மை குழு உறுப்பினர் பி. ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக போட்டியிடவுள்ள 21 மக்களவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒட்டு மொத்த 21 தொகுதியிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக்கூட வாய்பளிக்காமல் முஸ்லிம் சமுதாயத்தை முழுமையாக புறக்கணித்துள்ள திமுகவுக்கு ததஜவின் ஆதரவு நிலை சமுதாய அக்கரையுடன் எடுக்கப்பட்ட நிலைபாடா? அல்லது தமுமுக எதிர்ப்பு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிலைபாடா? முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.

வரூன்காந்தியின் வக்கிரமான பேச்சு. மோடி வகையராக்களின் முஸ்லிம்களை கருவறுக்கும் திட்டம். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் உரிமையைக்கூட மதிக்காமல் தாடி வைப்பதும் புர்கா அனிவதும் தாலிபானிசம் என்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி. பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் பாசிச சக்திகள் என்று முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமென்றும் முஸ்லிம்கள் எப்பொழுதும் அச்சுறுத்தலிலும் பயத்திலும் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று இவர்களுக்கெல்லாம் எந்த கொள்கை வழிகாட்டியது. முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதில் இந்துத்துவாவிற்கு இருக்கும் ஒற்றுமையை பாருங்கள்.

மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களாகிய நம்மிடம் ஏன் இந்த ஒற்றுமை இல்லை. நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம் (2:143) என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். ததஜ தலைவர்களே நடு நிலை என்றால் என்ன?

ஒரு தினகரனோ, தயாநிதியோ, பாலுவோ வெற்றிபெற்று அதிகாரத்தில் அமரும் போது அவர்களது தவறுகளை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா? களவாடிச் சென்ற உணர்வில் பக்கம் பக்கமாக சுட்டிக்காட்டி எழுத முடியுமா? மேடைதோரும் உங்களால் முழங்க முடியுமா? மாதக்கணக்கில் தொலைக்காட்சியில் பேச முடியுமா? உங்கள் மனசாட்சியை தொட்டு இறைவனுக்கு அஞ்சி பதில் சொல்லுங்கள்.

அதே இடத்தில் ஒரு அப்துல் காதரோ, அப்துல் ரஹ்மானோ, இபுறாகீமோ வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தில் இருக்கும் போது உங்களது பேனாவிற்கும் நாவிற்கும் உள்ள வலிமையை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமையை சமுதாயம் அடைகிறது. முஸ்லிம் லீக் சகோதரர்களுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குறை நிறைகளை சுட்டிக் காட்டுகிறோம் எழுதுகிறோம் அல்லவா? அவர்களும் அதற்கு பதிலளிக்கிறார்கள். அது போன்ற உரிமையை தினகரனிடமும் தயாநிதியிடமும் பாலுவிடமும் நீங்கள் பெற முடியுமா? கேட்க முடியுமா?

மனித நேய மக்கள் கட்சியில் இன்று வரை மக்களவை தேர்தல் பற்றிய நிலைபாடு எடுப்பதில் உள்ள தாமதம் ஒன்று (தவறு நிகழ்ந்துவிடக்கூடாதே என்று) இறைவனுக்கு அஞ்சுவதால் அடுத்து சமுதாயம் (நீங்கள் உட்பட) நாளைக்கு கேள்வி கேட்டுவிடக்கூடாதே என்ற அச்சம் காரணமாக நிதானமாய் முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. நிதானம் அல்லாஹ்வின் பன்பு அவசரம் ஷைத்தானின் பன்பு.

சமுதாய நலன் கருதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது நிலைபாட்டை மறு பரிசீலனை செய்யாவிட்டால் இப்போது எடுத்திருக்கும் உங்கள் முடிவிற்கு நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லும் நிலையில் இருப்பீர்கள் என்பதை சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமல்ல உங்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் கொஞ்ச நம்பிக்கையையும் நீங்கள் இழக்க நேரிடும். ஒரு முஸ்லிம் சகோதரன் என்ற முறையில் உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி ]

[ நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள்.

யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார்.

யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார்.

யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா?

என்று கேட்கப்பட்டதற்கு

அதற்கு "அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள்.

அறிவிப்பாவர்: உம்முஸமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி, அஹ்மத் ]

"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்." அல்குர்ஆன் 3:103

குர்ஆன் வசனங்களையும் நபி صلى الله عليه وسلم அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்றைய நிலையில் நன்கு சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய நமது சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதும் அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையிலும் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.

"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு." அல்குர்ஆன் 3:105

இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்கள் ஒன்றினைத்து கயிறாக உருமாறுவதைத்தான் "கயிறு" என்று நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.

ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு பதில் கூறட்டும்!

வல்ல அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.