.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 7, 2011

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது.

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

கடற்கரையே இல்லாதா வேலூர் மாவட்டத்திற்கு கணக்கு எழுதியவர்கள் இவர்கள் இதோ ஆதாரங்கள்.

மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகள்.

சுனாமியின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து எதையும் அவர்கள் தொட்டதில்லை என்றும் பீற்றிக் கொள்ளும் ததஜவினரே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இதோ உங்கள் தலைமை வெளியிட்ட கணக்குகள்.

1. சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. எந்த பிரிண்டிங் வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன் இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். சிவகாசிக்கு போய் பிரிண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம் பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.

2. பாலிதீன் பைகள் 1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது அல்ல.

3. நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி. அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப் பணியாளர்கள். முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள் சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன் தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? அவர்கள் 20,000க்கு வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய கலரில் உள்ளது. சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005 மார்ச்சில். 2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே போய் சேர்ந்துள்ளது.

4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு? சுனாமி நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.

5. டெம்போ ஆட்டோ வகை 235.

6. டீ செலவு 30.

7. நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள். த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப் பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா?

8. ஆட்டோ கூலி 50.

9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள் இல்லை. ஒரு நபர் கூட இல்லை.

10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம் இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.

11. கூரியர் 309.

12. போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.

http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html

13. ஆட்டோ 97.

14. கடிதம் தபால் தலை 474.

15. ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.

16. போக்கு வரத்து 7725.

17. உணர்வு 2,00,000.

18. இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000.

19. ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால் ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000. த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து எடுத்து விட்டார்கள்.

20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள். 50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய் என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில் பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.

21. எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. அந்த நேரத்தில் டாண் டி.வி. எடிட்டிங் வகைக்கு என பிஜே மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து இருக்கலாம்.

22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.

தலைமை மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று தலைப்பிட்டு அவர்கள் 22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர். இதில் 21 வகையான செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவுகள் அல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி உள்ளார்கள்.

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.


அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.


விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.


அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.


கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.


பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்


சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா?

இதற்கிடையில் தமுமுகவின் உணர்வு பத்திரிக்கையையும் அதன் உடமையையும் திருடியவர்கள் இப்போது அதை அவர்கள் திருடிவிட்டார்களாம்!?

மக்களே யார் திருடர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

9 comments:

wasil said...

assalamu alaikum.....ipadi koala adicirukavangala yeaduvum pana mudiyalayae apdinu ninaikum poatuta kastama iruku...makal yeana panuvanga avanga yeaduvum teariyadavanga....tearijavanga nama ta ita yeadutu soalanum

vidivelli said...

nalla alasal...
vaalththukkal..can you come my said?

TNTJ CBE said...

அவர்கள் அப்படியாவது கணக்கு காட்டி உள்ளனர் ஆனால் தாங்களோ எந்த விதமான கணக்கும் காட்டாமல் ஆட்டையை போட்டு விட்டீர்கள்.
சுனாமி கணக்கின் போது மாமா பாக்கரும் உடன் இருந்தார் அவரிடம் கணக்கை கேட்டு வாங்குங்கள்

M. Hussainghani. said...

TNTJ CBE AsathNagar> தனி மனிதனின் மீதுள்ள நம்பிக்கை தவறையும் சரிகாணச் செய்கிறது... அந்தோ பரிதாபம்... நாளை மறுமை நாளை அஞ்சிக் கொள்ளுங்கள்....

தமுமுக தரப்பில் தெளிவாக மக்கள் மத்தியில் அதிகாரிகளின் முன்னிலையில் முறையாக கணக்கு காட்டப்பட்டுவிட்டது.

அது மட்டுமல்ல தமுமுக வசூலிக்கும் போது அந்த கணக்கு "சுனாமி நிவாரண நிதி" என்ற பெயரில் கணக்கு துவங்கப்பட்டு வசூலித்து அதை முறையாக அரசுக்கு கணக்கு காட்டப்பட்டு விட்டது என்ற வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படி‍யே சொல்வதிலிருந்து மாறிக்கொள்ளுங்கள்.

நாளை மறுமை நாளை அஞ்சிக் கொள்ளுங்கள்....

நிஜாம் கான் said...

அன்புச் சகோதரர் நீங்கள் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறீர்களா? நிவாரணம் இன்றி கிடக்கும் மக்களுக்கு வசூலித்த தொகையில் 30 லட்சம் ரூபாயை அப்படியே முழுங்கிய உங்கள் தலைவர்கள் நரக நெருப்புக்கு அஞ்ச வேண்டாமா? இதோ பாருங்கள் தொடரை
http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/sunami_thirudar_varalaru/

இதற்கென்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? தமுமுக என்ற இயக்கம் உங்களின் கண்ணை மறைத்து விட்டதா? இப்போதும் கூட ஒன்றும் ஆகிவிடவில்லை. பொது விசாரணைக்கு உங்கள் இயக்கத்தை நீங்கள் தயார் படுத்த முடியுமா?

M. Hussainghani. said...

சகோ நிஜாம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஸலாம் சொல்லும் பன்பைகூட கற்றுத்தராத உங்கள் தலைமையின் அயோக்கியத்தனம் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது அது உங்கள் கண்களுக்குத் தெரியாது

உங்களுகோ அல்லது அடுத்த அமைப்பினரைப் பற்றி அவதூறு எழுதியே பிழைப்பு நடத்தும் உங்கள் தலைமைக்கோ இந்த 30 லட்டசம் எங்கு உள்ளது எப்படி உள்ளது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

அல்லது தமுமுக தலைமை 30 லட்டசத்தை முழுங்கி விட்டது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்ல முடியுமா?

உங்கள் வீட்டு வரவு செலவு கணக்கில் பக்கத்து ஊருக்காரன், கூட்டல் கழித்தலில் குறைகண்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

முத்திவிட்டது!? என்று விளங்கிக்கொள்வோம். அது போன்று உங்கள் கூட்டத்தினர் உள்ளனர். நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லதென்று பரிந்துரை செய்கிறோம்.

தயவு செய்து புனித ரமலானில் எங்களின் பணிகளில் கவனம் செலுத்த விடுங்கள்.

bahrulla said...

maanaketta sunami ayokiyar pj mattrum avar saarntha ayokiyargalai inam kandu kollvom

bahrulla said...

sunami thirudargal pj mattrum avar koolipadaigalai inam kandukolvom islamiyargalai kaappom

bahrulla said...

nayavanjaham seiyum pj mattrum avar koolipadaigalai inam kandu kolvom