.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, February 3, 2009

மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு!

மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு!
எங்கும் வரலாறு காணாத எழுச்சி!!

நமது செய்தியாளர்

தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு வரலாறு காணாத எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் இந்த அளவுக்கெல்லாம் பிரமிப்பூட்டும் விளம்பரங்களை செய்வார்களா? என தமிழ்நாடே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது என அரசியல் விமர்சகர் ஒருவர் நம்மிடம் கூறினார்.


அந்த அளவுக்கு யானை பலத்தோடு களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள் தமுமுக தொண்டர்கள். அவர்களின் உழைப்பைப் பார்த்து ஜமாஅத்துகள் எல்லாம் எங்களின் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த எழுச்சி சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதாக சமுதாயப் பிரமுகர்கள் நம்மிடம் கருத்து தெரிவிக் கின்றனர்.


சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளி­ருந்து வந்திறங்கும் சகோதரர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர். ''விளம்பரங்கள் தூள் கிளப்பு கின்றன'' என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.


வெளிநாடுகளில் வாழும் கொள்கை சகோதரர்கள் தங்கள் ஊர்களில்
விளம்பரங்கள் மற்றும் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என கேட்டு, தாயகத்தில் பணியாற்றுபவர்களை மேலும் உற்சாகப் படுத்துவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.


அதுவும் முன் எப்போதையும் விட ஒதுங்கியிருந்த ஜமாஅத்துகள் எல்லாம் என்னென்ன உதவிகள் தேவை என தன்னார்வத்தோடு பணிகளில் பங்கெடுப் பது ஒரு சமுதாய திருப்பமாகும். கடந்த 23 மற்றும் 30ஆம் தேதிகளின் போது ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மாநாடு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது நல்ல தொடக்கமாக இருப்பதாக நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


இந்நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் தினந்தோறும் பரவும் செய்திகள் நவீன பிரச்சாரமாகத் திகழ்கிறது.


பரபரப்பான சூழ்நிலையில் தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு பிப்.1 அன்று சென்னை பிரசிடென்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது.


அதில் மனிதநேய மக்கள் கட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அதன் முக்கிய நிர்வாகிகளையும் அறிவித்தார். பொதுச் செயலாளர்
பி. அப்துஸ் ஸமது அவர்களும், பொருளாளராக எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் அவர்களும் பணியாற்று வார்கள் என அவர் மிகுந்த உற்சாகத்திற்கிடையே அறிவித்தார்.


எந்தக் கூட்டணியில் இடம் பெறுவீர்கள்? என்று செய்தி யாளர்கள் கேட்டபோது அதை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், மாநாட்டிற்குப் பிறகு அறிவிப்பார்கள் என்றார்.


கட்சியின் விதிமுறைகளை ஏற்கும் எந்த சமுதாயத்தைச் சேர்ந்த வர்களும் இதில் இணைந்து பணியாற்றலாம் என்று அவர் கூறியது பத்திரிகை நண்பர்களால் வெகுவாக வரவேற்கப் பட்டது.


பிப்ரவரி 1 அன்று மாலை மாநாட்டுத் திடலை பார்வையிடுவதற்காக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களும் தாம்பரம் சென்றனர். அவர்களுக்கு காஞ்சி மாவட்ட தமுமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநாட்டுத் திடல் பணிகள் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி மேற்பார்வையில் துரித கதியில் நடைபெற்று வருகிறது.


போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் நிலையில் மாநாடு எல்லா வகையிலும் வெற்றிபெற வேண்டுமென் பதற்காக அனைவரும் தொழுது பிரார்த்திக்கும்படி தலைமைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது.


மாநாட்டு நிகழ்ச்சிகள்
www.tmmk.in, www.tmmk-ksa.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் உலகெங்கிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உளத்தூய்மையோடு ஆற்றும் பணிகளை இறைவன் அங்கீ கரிப்பான் என்பதில் ஐயமில்லை. தாம்பரம் நோக்கி எல்லோரும் புறப்படுகிறார்கள். அரசியல் களம் உண்மையிலேயே சூடுபிடித்து விட்டது.

Source: www.tmmk.in

No comments: