.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, June 8, 2011

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் "வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?" என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம் பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம் வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக தமுமுக தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம் அது.

தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில் பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில் சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.

ஆண்டுகள் பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிவுள்ளது.

பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்...
  • *வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
  • *தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட.
( இவர் மார்க்க பிரச்சாரம் செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில் தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம்.

SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும் நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின் நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்...

2 comments:

Sultan said...

சகோதரரே! இஸ்லாம் மார்க்கம் வளர்க்கவே இந்த பண உதவி வழங்கபட்டது. MMK அதிகாரத்தை வைத்துக்கொண்டு 13 வருடமாக நடத்தப்பட்டு வருவதை அபகரிக்க நிணைப்பதான் தவறு. அதற்கு அல்லாஹ் நற்கூளி வழங்குவானா? என்ன? ஒருவருக்கு ஒருவர் வசை பாடாமல் மார்க்க பணியையும், சமுதாயப் பணியையும் அல்லாஹ்க்கு பயந்தவர்களாக வாழ பழகுங்கள் சகோதர்களே! பிஜே தலைமைக்கும் சேர்த்துத்தான் இந்த அறிவுரை - முஹம்மது சுல்தான்

M. Hussainghani. said...

சகோதரர் சுல்தான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

எந்த ஒரு பிரச்சனையையும் விருப்பு வெறுப்பின்றி, காய்தல் உவத்தல் அகற்றி நோக்கின் உண்மை தோன்றாமற்போகா. ///13 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருவதை அபகரிக்க நினைப்பதுதான் தவறு/// என்று குறிப்பிட்டுள்ள உங்களின் கருத்து உங்களின் அறியாமையையும் நடுநிலைமை தவறையும் காட்டுகிறது. உணர்வு இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 2004வரை தமுமுக நிர்வாகத்தின் கீழ்த்தான் வெளிவந்து கொண்டிருந்தது. 2004ல் பிஜே வெளியேரும் போது சொத்துக்களுடன் பத்திரிக்கையும் களவாடப்பட்டது. சகோதரர்களே! நியாயத்தை மறைக்க முயலாதீர்கள் நா‍ளை மறுமை நாளின் தீர்ப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.