.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, September 18, 2008

சிறைவாசிகள் விவகாரம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்!

வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்

Source: தமுமுக அதிகாரபூர்வ இணையதளம்.

குணங்குடி ஹனீபா விடுதலை செய்யப்படாதது ஏன்?
அ. அப்துல் காதர், மந்தைவெளி, சென்னை-28

கேள்வி: அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாண்டு களுக்கும் மேலாக சிறைப்படுத்தப் பட்டுள்ள 1,405 கைதிகளை விடுதலை செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பல்லாண்டு களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் எத்தனைப் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?

பதில்: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியான உடனேயே, பத்தாண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை எவ்வித பாரபட்சமும் காட்டாமல் விடுதலை செய்ய வேண்டும் என த.மு.மு.க. தமிழக அரசை வலியுறுத்தியது.

இதுதொடர்பாக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் முஸ்லிம் கைதிகள் பாரபட்ச மாக நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டி, பத்தாண்டுகளை சிறையில் கழித்த முஸ்லிம் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

முஸ்லிம் சிறைவாசிகளை அண்ணா நூற்றாண்டு விழாவில் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமுமுகவின் மாநிலச் செயற்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழக முதல்வருக்கு அண்மையில் எழுதிய நினைவூட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது “பேரறிஞர் அண்ணா அவர்களது நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை அவர்களது எஞ்சிய தண்டனை காலத்தை மன்னித்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இவ்வாறு விடுதலை செய்யப் படும் கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மிகச் சிலர் மட்டுமே இடம் பெற்றுள் ளார்கள் என்று அறிய வருகிறேன். வகுப்புவாத மோதல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு அண்ணா நூற்றாண்டு விழாவில் விடுதலையாகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அறிய வருகிறேன்.

கடந்த காலங்களில் உணர்ச்சி களுக்கு அடிப்பட்டு குற்றங்கள் புரிந்த இந்த முஸ்லிம் கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளது நிச்சயமாக அவர்களைத் திருத்தி உள்ளது. இருப்பினும் இவர்கள் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு மற்ற கைதி களுக்கு அண்ணா நூற்றாண்டின் போது அளிக்கப்படும் சலுகை மறுக்கப் படுவது அரசின் மீது சிறுபான்மை சமுதாயத்தின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சில சுற்றறிக்கைகளையும் அரசாணை களையும் சுட்டிக் காட்டி அதிகாரிகள் முஸ்லிம் கைதிகளுக்கு அண்ணா நூற்றாண்டு விழாச் சலுகை கிடைக்க விடாமல் தடுத்திருக்கக் கூடும். ஆனால் தாங்கள் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஆயுத சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டப் பிரிவின் கீழ் தென்மாவட்டக் கலவர வழக்குகளை தாங்கள் துணிந்து வாபஸ் பெறச் செய்தீர்கள். தென்மாவட்டக் கலவரங் களைப் போல் கோவை மற்றும் தமிழ கத்தின் சில இடங்களில் நடைபெற்ற மோதல்கள் உணர்ச்சி வெளிப்பாடாக நடைபெற்ற மோதல்கள் தான். கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வு துறையின் தலைவர் திரு. பரம்வீர் சிங் அவர்கள் கோவை சம்பவங்களை பற்றிக் குறிப்பிடும் போது, “இந்நிகழ்வுக்கு பயங்கரவாத முத்திரை குத்துவதோ, தீவிரவாத சாயம்பூசுவதோ சரியில்லை. இது வெறும் ஒரு மோதல் சம்பவம் மட்டுமேயாகும்’’ என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிமன்ற நீதிபதியும் தனது தீர்ப்பில் பிரதிபலித்தார்.

எனவே, தென்மாவட்டக் கலவர வழக்குகளில் தங்கள் அரசு மேற் கொண்ட அதே நெறிமுறையைப் பின்பற்றி, வகுப்புவாத வழக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளையும் அவர்களது எஞ்சிய தண்டனைக் காலத்தை மன்னித்து விடுதலை செய்ய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா தருணத்தில் ஆவன செய்ய அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

இவர்கள் தொடர்பான வழக்கு மேல்முறையீட்டிற்குச் சென்றுள்ளது, எனவே இது குறித்து முடிவு செய்ய இயலாது என்று அதிகார வர்க்கம் மேலும் தடையைப் போடலாம். அறிஞர் அண்ணாவின் 98 மற்றும் 99ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளிலும் அதற்கு முன்பும் பொது மன்னிப்பில் விடுதலையான ஆயுட்கைதிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களில் மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போது பொது மன்னிப்பைப் பெற்றவர்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஒவ்வொரு மணிப்பொழுதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் என்னைத் தொடர்பு கொண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கைதிகளுக்கு அளிக்கப்படும் சலுகை ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் தொடர்பாகத் தங்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே தயவு கூர்ந்து தாங்கள் சிறுபான்மை மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் இதுகுறித்து உரிய உத்தரவை உடனடியாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’
அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி விடுதலை செய்யப்பட்ட 1,405 கைதிகளில் 35 முஸ்லிம் ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை வருமாறு (சென்னை 4, வேலூர் 4, திருச்சி 2, சேலம் 1, கோவை 7, மதுரை 8, நெல்லை 8, கேரளாவைச் சேர்ந்தவர் 1) இவர்கள் வகுப்புக் கலவரங்கள் தொடர்பான குற்றத்தில் தண்டிக்கப்படாதவர்கள்.
வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
============================
அஸ்அத் அலி, திருவாரூர் கேள்வி: பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் குணங்குடி ஹனீபா அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்படாதது ஏன்?

பதில்: நீதிமன்றத்தால் ஆயுள் (14 ஆண்டு கால) தண்டனை வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவோர் மட்டும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் தண்டனைக் கைதி அல்ல, விசாரணைக் கைதியாவார். அவருக்காக தமுமுக தொடர்ந்து வாதாடும், போராடும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி 17 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். அவரை காங் கிரஸ் தலைவி சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் மன்னித்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை.
இதுபோன்ற பாரபட்சங்களும் கண்டிக்கத்தக்கதே.

No comments: